2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வவுனியாவில் விவசாயிகள் தினம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவிலுள்ள கள்ளிக்குளம் கிராமத்தில் விவசாயிகள் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவிலுள்ள  சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விவசாயிகள் தினத்தின்போது, கள்ளிக்குளம் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் காணிகளில் பயன்தரு மரங்களை நாட்டப்பட்டன.

அத்துடன், மேற்படி குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் சமூக ஆர்வலர்கள் வழங்கினர். 

மேலும், கள்ளிக்குளம் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் குறைநிறைகளையும் சமூக ஆர்வலர்கள் கேட்டறிந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான கோ.சிவநேசன், வவுனியா பாடசாலை சாரணர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--