2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு, பால்பண்ணை பிரதேசத்திலுள்ள உள்ள பிரதான பாலமானது நீண்டகாலமாக உடைந்து காணப்படுவதால் தாம் பல்வேறு பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பால்பண்ணை, முறிப்பு, தன்னிமுறிப்பு, குமுழுமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள்
இவ்வீதியூடாகவே  போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர்.

எனினும் நீண்ட காலமாக குறித்த பாலம் உடைந்து காணப்படுகின்றமையால் அவ்வீதியூடாக போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பாலத்திற்கு பாதுகாப்பு கம்பி இல்லாமையினால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முறிப்பு, பால்பண்ணை பிரதேங்களில் தற்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற வீடமைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த பாலம் உடைந்து போயுள்ளமையினால் இவ்வீதியூடாக கனரக வாகனங்கள் மூலம் வீடு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை மாற்று வழியை பயன்படுத்தியே கொண்டுவருவதாகவும் இதனால் பொருளாதார ரீதியில் தாம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயணம் செய்யும் கணுக்கேணி – குமழமுனை வீதியின் பால்பண்ணை பிரதேசத்திலுள்ள பாலத்தை உரிய முறையில் புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--