2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'முதியோர்களின் பாதுகாப்பை சமூகம் பேண வேண்டும்'

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி. சிவகருணாகரன்


முதியோர்களின் பாதுகாப்பை சமூகம் பேணிக்கொள்ள வேண்டும். அது ஒரு முக்கியமான கடமையாகும். இந்த மண்ணையும் நாம் அனுபவிக்கின்ற வளங்களையும் உருவாக்கியவர்கள் முதியவர்களே. அவர்களே எமக்கான பண்பாட்டையும் வாழ்க்கையையும் உருவாக்கித்தந்தவர்கள்.

ஆகவே அத்தகைய சிறப்புக்குரியவர்களை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும். நாளை நாமும் முதியோர் ஆவது தவிர்க்க முடியாதது என்று கரைச்சிப் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (05) கிளிநொச்சி ஊற்றுப்புலம் பிரதேசத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, இந்தப் பிரதேசத்தை உருவாக்குவதில் தங்களுடைய உழைப்பையும் ஆற்றலையும் அர்ப்பணித்தவர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள். இவர்கள் உருவாக்கிய இடங்களில் இருந்தே நாம் எமது இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே இந்த வாழ்க்கையை எங்களுக்குப் பரிசளித்தவர்களை நாம் மறந்து விடக்கூடாது என்றார்.

ஊற்றுப்புலம் பிரதேச முதியோர் அமைப்பின் தலைவர் நா. சின்னையா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சிப்பிரதேச சபையின் தவசாளர் நா. வை. குகராஜா. சமூக சேவை உத்தியோகத்தர் சி. தவேந்திரன் உட்படப்பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .