2021 மார்ச் 06, சனிக்கிழமை

மன்னாரில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் ஜனனதினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழர்களின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 116ஆவது பிறந்த தினம் திங்கட்கிழமை  (31) மன்னாரில்  அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறம் காவலர் அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலையுள்ள  முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இவரது திருவுருவச் சிலைக்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகரசபை உறுப்பினர் எஸ்.பிரிந்தாவனநாதன், இந்து மதகுரு ஐங்கர சர்ம ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .