2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

எரிகாயங்களுக்குள்ளான சிறுமி மரணம்

Kogilavani   / 2014 மார்ச் 31 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி (வயது -16) சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஹப்ஸா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி சிறுமி கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் உணவு சமைப்பதற்காக விறகு அடிப்பினை மூட்டும் போது எதிர்பாராதவிதமாக தீக்காயங்களுக்கு உள்ளானர்.

இதனையடுத்து சிறுமியின் சகோதரர்கள் உடனடியாக யுவதியை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் கடந்த ஒருவாரகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைகள் பலனின்றி இன்று காலை மரணமானார்.

இத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி கே.தியாகராஜா மற்றும் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .