2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தகவல் தந்தால் ஒரு மில்லியன் சன்மானம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோபி, தெனியன் மற்றும் அப்பன் ஆகிய மூவர் தொடர்பில் தகவல் தருமாறு கோரி மன்னாரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இவர்கள் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு ரூபா 1 மில்லியன் சன்மானம் வழங்கப்படுவதுடன் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என அந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள், நகர பகுதிகள், அரச திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களிள் ஒட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த தகவல்கள் அடங்கிய சுவரொட்டிகள் இரு தினங்களுக்கு முன் வடபகுதியில் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .