2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் உப்புக்குளம் காணியை கிராமத்தேவைகளுக்காக ஒதுக்கித்தருமாறு கோரிக்கை

Super User   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசெரியன் லெம்பேட்

மன்னார் உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள அரச காணியினை, கிராமத்தின் பொதுத்தேவைகளுக்கு வழங்குமாறு உப்புக்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் எம்.கே.பவுசீன் மன்னார் நகர சபையிடம் திங்கட்கிழமை (7) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எழுத்து மூலம் தனது கோரிக்கையை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறித்த காணியினை அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் அபகரிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றனர். தற்போது குறித்த காணிக்கு அடாத்தாக சுற்று வேலிகளை அடைத்து வருகின்றனர்.அதற்கு எமது கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

மன்னார் நகர சபை இக்கிராமத்திற்கு தேவையான பொதுத்தேவைகளை நிறை வேற்ற இக்காணியை ஒதுக்கித்தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் உப்புக்குளம் கிராம மக்கள் கையொப்பமிட்டு அதன் பிரதிகள் மன்னார் அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .