2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மஞ்சள் கடவையால் சென்றவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் ஏ – 9  வீதியிலுள்ள மஞ்சள் கடவையூடாக சைக்கிளுடன் பனங்கண்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி பொன்னையா (வயது 62) என்பவர் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பேரூந்துவொன்று மோதியதால் அவர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பேரூந்தே இவர் மீது மோதியது.
முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்,  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, குறித்த பேரூந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .