2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளிச் சிறுவர்களுக்கு பால்மா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 16 முன்பள்ளிகளைச் சேர்ந்த 700 சிறுவர்களுக்கு பால்மா பைக்கட்டுக்களை  வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  திங்கட்கிழமை (21) வழங்கிவைத்தார்.

சிறுவர்களின் ஆரோக்கியச் செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாக பால்மாவை வழங்கியதாக வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வீதி, மின்சாரம்,
குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இது தொடர்பில் அக்கிராம  மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.சுபைர், மடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.விஸ்வராஜா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--