2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரணைமடு கமக்கார அமைப்பு சந்திப்பை புறக்கணிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நிதித் திட்டமிடல் அமைச்சின் ஏற்பாட்டில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்வது தொடர்பாக கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலை தாம் புறக்கணிப்பதாக இரணைமடு விவசாயிகள் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேற்படி கலந்துரையாடல் நிதி அமைச்சின் செயலாளர் திரு.பி.பி.ஜயசுந்தரம் தலைமையில் இன்று (24) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த கலந்துரையாடலைப் புறக்கணிப்பது தொடர்பாக இரணைமடு விவசாயிகள் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனுக்கு புதன்கிழமை (23) கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'நாளை (இன்று-24) நிதி அமைச்சின் செயலாளர் திரு.பி.பி.ஜயசுந்தரத்தை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைத் தாங்கள் செய்திருந்தீர்கள். இதில் நாமும் கலந்து கொள்ள ஆவலாய் இருந்தோம். ஆனால் சு.மனோகரன் (முன்னால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சமமேளனங்களின் தலைவர் - 2006) தலைமையிலான ஒரு குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளமையால் இதனை ஆட்சேபித்து இச்சந்திப்பில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.

எமது சம்மேளனப் பிரதிநிதிகளை கிளிநொச்சியில் வைத்து சந்தித்து கலந்துரையாடி நேரடியாக வந்து பிரச்சினைகளைக் கண்டறிந்து கொள்வதற்கு தாங்கள் ஆவண செய்து தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட (பிரதேச சபைத் தேர்தலில் தோற்றிருந்தமை) சு.மனோகரன் அவர்களை இதில் முதன்மைப்படுத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பின் போது மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் வடமாகாண சபையின் நிபுணர்குழு அறிக்கையையும் கவனத்தில் எடுப்பதற்கும் ஆவண செய்து தருமாறும் வேண்டுகிறோம்.

கடந்த திங்கட்கிழமை (21) யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமை (22) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இரணைமடு நீர் யாழ்ப்பாணம் கொண்டுசெல்வதற்கான திட்டம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தும் திட்டமிட்டே ஆராயப்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பினை அவசியம் ஏற்படுத்தித் தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .