2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வவுனியாவில் கடும் வறட்சியால் மக்கள் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக கிராமபுற மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மழை வீழ்ச்சி குறைவடைந்து  காணப்படுவதனால் களங்களிலும் நீர் மட்டம் குறைந்துள்ளதுடன் கிணறுகளில் நீர் அற்றுப்பொகும் நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக வவுனியாவின் பல கிராமங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதுடன் விவசாய செய்கைக்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வறட்சியின் காரணமாக புற்கள் காய்ந்து காணப்படுவதனால் கால்நடைகளும் உணவுப்பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ளதுடன் போதியளவு  நீர் கிடைக்காத நிலையையும் எதிர்நோக்கியுள்ளது.

இந் நிலையில் கற்குளம், தோணிக்கல், நெடுங்கேணியின் சில கிராமங்கள் மற்றும் செட்டிகுளத்தின் பல கிராமங்கள் உட்பட புளியங்குளம் பிரதேசத்திலும் நீர் பற்றாக்குறை காணப்படுவதனால் தோட்டச்செய்கைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளமையால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--