2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக ஓமந்தை  பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் மரம் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணமடைந்தவரின் சடலம்   வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X