2025 ஜூலை 02, புதன்கிழமை

குடிநீர்த் தாங்கிகள் திருட்டு

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 1000 லீற்றர் கொள்ளளவு செய்ய கூடிய 3 குடிநீர் தாங்கிகள் வியாழக்கிழமை (03) இரவு திருடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுசுட்டான், வித்தியாபுரம், மற்றும் தாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலயம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

குறித்த 3 குடிநீர்த் தாங்கிகளின் மூலமே அப்பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், குடிநீர்த் தாங்கிகள் திருடப்பட்டமையினால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்புப் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொர்ப்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .