2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மேலும் இரண்டு எலும்புகளின் எச்சங்கள் மீட்பு

Kogilavani   / 2014 ஜூலை 04 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்.முகமாலைப் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு எலும்புகளின் எச்சங்கள்  மீட்கப்பட்டதாகப் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், நீர் அள்ளும் கான் ஒன்றும்  காலணியொன்றும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

முகாமாலைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள், கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் பணியில் ஈடுபடும்போது, எலும்புக்கூடு ஒன்று இருப்பதினை அவதானித்து பளைப் பொலிஸாரிற்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்கமைய புதன்கிழமை (02) ஒரு எலும்புக்கூடும்  வியாழக்கிழமை (03) இரண்டு எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன.

அவற்றுடன் வெடிபொருட்களும்  இதர பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.  அத்துடன், அப்பகுதியில் மேலும் பல எலும்பு கூடுகள்  இருக்கலாம் எனப் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .