2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மாகாண உறுப்பினர்கள் நிதியுதவியில் அபிவிருத்திகள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம், சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக பலவிதமான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுப்பினர் வை.தவநாதனுடைய 2 இலட்சம் ரூபாய் நிதி மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் 1 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் கிளிநொச்சி வன்னேரிக்குளத்திலுள்ள யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த இல்லம் யுத்தத்தால் சேதமடைந்து மீளவும் இயங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றது.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவின் கீழ், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தேவிபுரம் முதியோர் சங்கத்தின் ஒலிபெருக்கி கொள்வனவு, உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் 25 ஆயிரம் ரூபாய் நிதியில் மேற்படி சங்கத்திற்கு தளபாடங்கள் கொள்வனவு, உறுப்பினர் வீ.கனகசுந்தர சுவாமியின் 25 ஆயிரம் ரூபாய் நிதியில் சங்கத்தின் நுழைவாயில் ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.

வட மாகாண சபை உறுப்பினர் ச.சிவமோகனின் 1 இலட்சம் ரூபாய் நிதியில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மந்துவில் முதியோர் சங்க கட்டிடம், வட மாகாண சபை சி.தியாகராஜாவின் 20 ஆயிரம் ரூபாய் நிதியில் நெடுங்கேணி மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தின் மின் இணைப்பு, வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ணவின் 40 ஆயிரம் ரூபாய் நிதியில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மெனிக்பாம் முதியோர் சங்கத்தின் வேலி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அந்தந்த மாகாண சபை உறுப்பினர் தங்கள் நிதிகளை ஒதுக்கியுள்ளனர். அவற்றை வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடக உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சமூக சேவை அலுவலர்கள் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .