2021 மே 08, சனிக்கிழமை

காணாமற்போனோரின் உறவுகள் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


காணாமற்போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (08) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.


'மாற்றத்துக்காய் வாக்களித்தோம் மாற்றுவீரா எம் வாழ்வை', 'குடும்ப உறவை முறியத்தது முன்னாள் அரசாங்கம்', 'வீணாகப் போய்விடுமா காணாமல் போனோரை நினைத்துருகிய கண்ணீர்', 'எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே', 'மைத்திரியே எங்கள் புத்திரர்கள் எங்கே, உம்மையே நம்புகின்றோம் எம்மவர்களை மீட்டுத்தாரும்', 'வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.   


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான   மகஜர் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம்  கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X