Princiya Dixci / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மாணவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சனிக்கிழமை (7) கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
தம்பனைக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் தங்கவேல் சுப்ரமணியம் அஜந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நேயர்களின் நிதிப் பங்களிப்புடன் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், தம்பனைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜேசுதாசன் வோல்டன், கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி செல்வராசா புஸ்பராணி மற்றும் தம்பனைக்குளம் 'நியூஸ்டார்' விளையாட்டுக் கழகத் தலைவர் சிவலிங்கம் சிவகாந்தன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



9 minute ago
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
2 hours ago