Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவின் இரணைமாதாநகர் கிராமத்தில் கடற்பாசி வளர்க்கும் திட்டத்துக்கு தெரிவாகிய 50 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக உத்தியோகத்தர் ச.சலீபன் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்டு, தற்போது சமுர்த்தி அமைச்சால் வழங்கப்பட்ட நிதியை, பூநகரி பிரதேச செயலாளர் சி. சத்தியசீலன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கடற்பாசி வளர்க்கும் திட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் வலைப்பாடு, பள்ளிக்குடா ஆகிய கிராமங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. தற்போது இரணைமாதா நகரிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடற்பாசியிலிருந்து பெறப்படும் கரஜினன் எனும் திரவம் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த திரவம் விலங்குணவுகளுக்கும் பாவிக்கப்படுகிறது. ஹேலீஸ் எனும் தனியார் நிறுவனம் இவ்வாறு உற்பத்தியாகும் கடற்பாசிகளைக் கொள்வனவு செய்து வருகிறது.
இதனால் உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தலை பற்றி எவ்வித பயமுமின்றி கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட முடியும். மீனவர்கள் தங்களில் மேலதிக வருமானத்தை பெறுவதற்காக இந்த கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
16 minute ago
52 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
52 minute ago
56 minute ago