2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்: வாக்காளர் அட்டைகள் விநியோகம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை முதல் வாக்காளர் அடடைகள் விநியோகிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரா சசீலன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், 'கடந்த 2012ஆம் குறித்த இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததுடன், அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட போது நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த இரு பிரதேச சபைகளுக்கும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இம்மாதம் 28ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 90 வேட்பாளர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 72 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை, கரைத்துறைப்பற்றில் 23,559 பேரும், புதுக்குடியிருப்பில் 29,279 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை வியாழக்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .