2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா பெண் மரணம்

Gavitha   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மகள், தான் பணிபுரிந்த இடத்தில் கழுத்து அறுபட்டு உயிரிழ்ந்துள்ளதாக, வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் சத்திவேல் பொன்மலர் (வயது 60) தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கசார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா, சிதம்பரம் அகதி முகாமில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகரத்தில் உள்ள வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற சுப்பா கமலாதேவி(வயது 36) என்ற, இரண்டு குழந்தைகளின் தாயான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .