2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வவுனியா விமானப் படைத்தள வயல்வெளிக்கு தீ வைப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

வவுனியா, மாமடு பிரதேசத்தில் அமைந்துள்ள விமானப் படைத்தளத்துக்கு முன்னால் உள்ள வயல்வெளி, ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இனந்தெரியாதோர் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீ, விமானப் படைத்தளத்தை நோக்கி பரவி வந்ததால், அதனை கட்டுப்படுத்த விமானப்படையினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாக படைத்தள அதிகாரிகள் கூறினர்.

இந்த தீ காரணமாக, வயல்வெளிக்கு அருகிலுலுள்ள காட்டுப் பகுதியும் தீர்க்கிரையாகியுள்ளது.

விமானப்படையினரின் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் விமானப் படைத்தளம் பாதுகாக்கப்பட்டதாக கூறிய மடுகந்த பொலிஸார், இந்த தீ வைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .