2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

எரிவாயுவில் ஏற்பட்ட கசிவினால் வீடு தீப்பிடிப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

மன்னார், எமில் நகர் கிராமத்தில் பூண்டிமாதா கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (16) ஏற்பட்ட தீ விபத்தினால் குறித்த வீட்டின் சமையல் அறை சேதமடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 

சமையல் எரிவாயுவில் ஏற்பட்ட கசிவே இவ்விபத்துக்கு காரணமெனவும் இதில் உயிர் ஆபத்தோ அல்லது எவரும் காயங்களுக்கோ உள்ளாகவில்லை எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டில் வசித்த பெண், சமையலுக்காக கேஸ் அடுப்பில் உணவை வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். இதன்போது, எரிவாயுவில் ஏற்பட்ட கசிவு காரணமாக வீட்டின் சமையல் அறையில்  தீ பரவியுள்ளது. அதனால் சமையல் அறை பலத்த சேதத்துக்கு உள்ளானதுடன், குறித்த வீட்டின் கூரையும் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .