2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஆர்.டி.ஏ விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (ஆர்.டி.ஏ) விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (21) காலை பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மன்னார் நகர சபை பிதான வீதியில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதி அமைந்துள்ளது. குறித்த விடுதியில் கடந்த 33 வருடங்களுக்கு முன் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய ஒருவர் தனது மனைவியுன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய குறித்த நபர் இறந்துள்ளார்.

இந்த நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில்  கடமையாற்றிய குறித்த நபர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்களை அங்கிருந்து வெளியேற மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், கடந்த 8 வருடங்களாக அவர்கள் குறித்த விடுதியிலே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற நீதிமன்றத்தினால் 3 மாதம்  அவகாசம் வழங்கப்பட்டது.

மீண்டும் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போதும் அவர்கள் குறித்த விடுதியை விட்டு வெளியேறவில்லை.

தொடர்ச்சியாக அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக இன்று வெள்ளிக்கிழமை (21) காலை மன்னார் பொலிஸாரின் உதவியுடன் குறித்த விடுதியில் உள்ள பொருட்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .