2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தாக்கப்பட்ட சந்தேகநபர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

George   / 2015 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களையும் சட்ட வைத்திய அதிகாரியின் சோதனைக்கு உட்படுத்துமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று சனிக்கிழமை(22) உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த இருவர், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைள சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை(21) மாலை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இரவு 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரு சந்தேகநபர்களும் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கடுமையாக பொலிஸாரினால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இரு சந்தேகநபர்களில் ஒருவர், கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அதனையடுத்து. இரண்டு சந்தேகநபர்களும் சனிக்கிழமை(22) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எம்.சதக்கத்துள்ளா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இதன் போது, திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறி முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேகநபர்களும் முருங்கன் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இரு சந்தேகநபர்களில் ஒருவரின் கண், முகம் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு வாய் மற்றும் உதட்டுப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த இரு சந்தேகநபர்களையும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரியின்  வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரனைகளை மேற்கொண்டு அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் திங்கட்கிழமை(24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .