Editorial / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (08) மோதுகின்றன. இந்த ஆட்டம் காலை 11 மணிக்கு சென்னைசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமானது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 1-4 என இழந்த நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குகிறது. டாப் ஆர்டரில் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் பலம் சேர்க்கக்கூடும். ரச்சின் ரவீந்திரா, மார்க்சாப்மேன், டேவன் கான்வே ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நடுவரிசையின் பலம் அதிகரிக்கும்.
பந்துவீச்சிலும் அந்த அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியிருந்தனர். எனினும் ஒரு போட்டியில் விளையாடிய லாக்கி பெர்குசன் கவனம் ஈர்த்திருந்தார். இதனால் அவர், ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சுழலில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி பலம் சேர்க்கக்கூடும். ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி கடந்த வாரம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றிருந்தது. அணியில் உள்ள 11 வீரர்களும் எந்த தருணத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடிக்கொடுப்பவர்களாக இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
சுழலில் ரஷித் கானுடன் முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். இரு அணிகளைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் இருந்து ஓரளவுக்கு உதவியை எதிர்பார்க்கலாம். ஏனெனில் போட்டி காலை 11 மணிக்குத் தொடங்குவதால் பனிப்பொழிவு இருக்காது.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷத்ரன், டார்விஷ் ரசூலி ஆகியோரைச் சுற்றியே இருக்கும், மேலும் நிலையான செடிகுல்லா அடாலும் கவனிக்கப்பட வேண்டிய வீரராக இருப்பார்.
‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில்பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இருசாம்பியனான இங்கிலாந்து அணி நேபாளத்துடன் மோதுகிறது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago