2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வன்னியில் 28 பாடசாலைகளை ‘யுனிசெவ்’ புனரமைக்கவுள்ளது

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இயங்க ஆரம்பித்துள்ள பாடசாலைகளில் 28 பாடசாலைகளை முழுமையாகத் திருத்தி அமைப்பதற்கென ‘யுனிசெவ்’ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகள் வடக்கின் மீள் எழுச்சித் திட்டம் மற்றும் கல்வி அமைச்சின் நிதியுதவி ஆகியவற்றுடன் திருத்தியமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் காரணமாக பாடசாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 28 முன்னிலைப் பாடசாலைகளை முழுமையாகப் புனரமைப்பதற்கு ‘யுனிசெவ்’ நிறுவனம் முன்வந்துள்ளது.

விரைவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களின் சீரான கல்வி நடவடிக்கைக்கு வழிவகுக்கப்படும் - என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--