2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

Kanagaraj   / 2014 ஜூலை 02 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க


இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02)  தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு  வெளியேறினர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின்  பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .