2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஆஸி பயணம் வவுனியாவில் முடக்கம்; இரு பெண்கள் உட்பட 31பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக முயற்சித்த 31பேரை வவுனியாவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செயப்பட்ட இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மன்னார், சிலாவத்துறை பிரதேசத்துக்குச் சென்று அங்கிருந்து படகு மூலம் செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள் பயணித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டதை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் கைக்குழந்தையொன்றும் அடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தனர். (ரொமேஸ் மதுசங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .