Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பி.சரண்யா)
கண்டியில் உயர்ந்த சம்பளம் மற்றும் தங்குமிட வசதியுடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் நிறுவனமொன்றினால் கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லப்படவிருந்த 40 பெண்பிள்ளைகள் அவர்களது பெற்றோரின் சந்தேக வெளிப்பாடு காரணமாக அங்கு செல்லவிடாது தடுக்கப்பட்டனர்.
இந்த விடயம் குறித்து தெரிய வருவதாவது:-
நேற்றுக் காலை கிளிநொச்சி பிள்ளையார் கோயிலடிப் பகுதியில் வைத்து கண்டியைச் சேர்ந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு என்னும் பேரில் பெண்பிள்ளைகளைத் திரட்டியுள்ளனர்.
16 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், உணவு, காப்புறுதி , மருத்துவச் செலவு போன்றன வழங்கப்படும் எனவும் இவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 40 பேர் குறித்த நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டு நேற்று முற்பகல் 10 மணியளவில் 3 வாகனங்களில் ஏற்றப்பட்டு பயணத்துக்கு தயார் நிலையிலிருந்தபோது இது குறித்து பிள்ளைகளின் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டனர்.
கிராம சேவகரிடமோ படை அதிகாரிகளிடமோ எந்தவித அனுமதியும் பெறாது இவர்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவர்களால் தெளிவான பதில்கள் வழங்கப்படவில்லை என்றும் இதனையடுத்து, உரிய அனுமதிகள் எடுக்கப்பட்ட பின்னரே பிள்ளைகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்கு ஒப்புக்கொண்ட குறித்த நிறுவனத்தினர் பிள்ளைகளை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
10 minute ago
12 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
39 minute ago
44 minute ago