Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத நிலையில் காணிகளை இழந்த 42 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டத்துடன் கூடிய 20 பேர்ச் பரப்பளவு காணி வழங்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சிப் பிரதேச செயலர் திருமதி சுலோஜினி, கரைச்சிப் பிரதேச காணி அலுவலர், அந்தப் பிரதேச கிராம அலுவலர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அம்மக்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர். அத்துடன், அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து வருகை தந்து கடந்த நான்கு மாதங்களாக தற்காலிக இடமொன்றில் வசித்து வருகின்ற 42 குடும்பங்களுக்கும் ஏ - 9 வீதிக்கு அண்மையாக சிவபாத கலையகப் பாடசாலைக்கு அருகில் வீட்டுத்திட்டத்துடன் கூடிய காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்திற்கான நீர், மின்சாரம், வீதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, புதிதாக திருமணம் செய்த அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் காணி கோரி பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி அம்மக்களுக்கு காணிகளை வழங்குமாறு அரச அதிபர், பிரதேச செயலரையும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago