2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

10 மாதங்களில் மன்னாரில் 46 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரை பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிரசாரமும் எதிர்ப்புப் பேரணியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
'2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரையான 10 மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளன.

இதன் அடிப்படையில் 6 பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களும் 16 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் 24 சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .