2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

முல்லைத்தீவு 5 உதவி அரச அதிபர் பிரிவுகளில் துரிதகதியில் மீள்குடியேற்ற பணிகள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பி.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலேயே இந்த மீள்குடியேற்றம் இடம்பெற்று வருவதாகவும்  அவர் கூறினார்.

இவ்வாறு மீளக்குடியமரத் திரும்பியுள்ள மக்களின் குடியேற்றத்துக்கான வீடுகள் இந்திய அரசும், அரச, அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X