2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மானவர்களுக்கு ஆளுனர் விருது

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மானவர்களுக்கு ஆளுனர் விருது வழங்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை மன்-அல்-அஸ்ஹர்.ம.வி நவோதைய பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் இம்முறை சித்தியடைந்த 124 மாணவர்களுக்கு வடமாகான ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறயின்; ஆளுனர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஒவ்வெரு மாணவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் பெருமதியான காசோலைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வை மன்னார் வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் மற்றும் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் கல்வி வலயத்தில் 114 மாணவர்களும் மடு கல்வி வலயத்தில் 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .