Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
முல்லைத்தீவு, முள்ளியவளை விபுலானந்தாக் கல்லூரியின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் மணிவிழா நிகழ்வுகள் கல்லூரி அதிபர்.ரி.கே.சிவலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்தில் உருவான பாடவிதானத்துடன் கூடியதான பொருட்கண்காட்சியும் மற்றும் வெளியார் நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருட்கண்காட்சியும் இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளன.
அத்துடன், புதிய நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பாடசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களும் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுமதிலும் திறந்துவைக்கப்படவுள்ளதுடன், பழைய மாணவர்களை கௌரவித்தலும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
4 hours ago