2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

’66 அபிவிருத்திப் பணிகளுக்காக 190 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்துக்கு 190 மில்லியன்  ரூபாய் நிறைந்த கிராமம் சமூக  அடிப்படை கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 166 அபிவிருத்திப் பணிகளுக்காக 190 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குமான இரண்டு மில்லியன் ரூபாய் அபிவிருத்தித் திட்டமான நிறைந்த கிராமம் சமூக அடிப்படை அபிவிருத்தி திட்டம் பற்றிய கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி சம்பந்தமாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 95 கிராம அலுவலர் பிரிவிக்கும் சுமார் 190 மில்லியன் ரூபாய் படி கரைச்சி செயலகப் பிரிவுக்கு  71 திட்டங்களுக்கு 84 மில்லியன் ரூபாவும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு 32 திட்டங்களுக்கு 32  மில்லியன் ரூபாவும்,  பூநகரி செயலகப் பிரிவுக்கு திட்டங்களுக்கு மில்லியன் ரூபாவும் பச்சிளைப்பள்ளி செயலகப் பிரிவுக்கு 38 திட்டங்களுக்கு 36 மில்லியன் ரூபாவும் முன்மொழியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .