Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நிவாரணக் கிராமங்களில் வசித்த இடம்பெயர்ந்த 689 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் போட்டிப் பரீட்சைக்கு வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோற்றினார்கள்.
இவர்களுக்குரிய இலவச போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது என வடமாகாண கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா தெரிவித்தார்.
அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெற்றது எனவும் மாகாண கல்விப்பணிப்பாளர் கூறினார்.
அதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு வடமாகாணத்தில் 18 ஆயிரத்து 237 மாணவர்கள் தோற்றினார்கள் என குறிப்பிட்ட மாகாண கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 196 பரீட்சை நிலையங்களும் 91 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago