2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மன்னாரில் இன்று 9 மணிநேர மின்வெட்டு

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னாரில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் தடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையுமான 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டம் முழுவதும் பகல் இரவு நேரங்களில் திடீர் திடீர் என மின்தடங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

இது தொடர்பாக மன்னார் மாவட்டத்திற்கு பொருப்பான கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சகர் எஸ்.பிரபாகரனை  தொடர்பு கொண்டு கேட்டபோது,

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளில் உப்புக்காற்று படிவதனால் தொடர்ந்து மின்தடங்கள் ஏற்படுகின்றது என  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X