2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

காணாமல்போன 9 வயது மாணவன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சரண்யா)

கிளிநொச்சியில் நேற்று மாலை பிரத்தியேக வகுப்புக்காக வீட்டிலிருந்து சென்ற 9 வயது மாணவன் ஒருவன் இன்று காலை குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தலிங்கம் சஞ்சீவன்  எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இம்மாணவன்  நேற்றுமாலை தனியார் வகுப்புக்குச் சென்று திரும்பும் வழியில், அவனை ஒருவர் சைக்கிளில் ஏற்றிச்சென்றதாக மற்றொரு மாணவன் தெரிவித்துள்ளான். அதன்பின் காணாமல் போன  சஞ்சீவன் இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்பட்டான்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எஸ்.சிவகுமாரின் மேற்கொண்ட விசாரணையைடுத்து அம்மாணவனி;ன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--