2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

"போருக்கு பின்னரான அபிவிருத்தி நோக்கிய விஞ்ஞானமும் முகாமைத்துவ" ஆய்வரங்கு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

"போருக்கு பின்னரான அபிவிருத்தி நோக்கிய விஞ்ஞானமும் முகாமைத்துவமும்" என்னும் தலைப்பிலான ஒரு நாள் ஆராய்ச்சி  ஆய்வரங்கு இன்று புதன்கிழமை காலை வவுனியா - கண்டிவீதியில் உள்ள திறந்த பல்கலைக்கழக மண்டபத்தில் வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் என்.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் உள்ளிட்ட பல கல்விமான்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வின்போது பல பாகங்களிலும் இருந்தும்  வந்திருந்த  கல்விமான்களினால் 44 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினரால் நடத்தப்பட்ட மூன்றாவது ஆய்வரங்கம் இதுவாகும். மூன்று பிரிவுகளாக அமர்வுகள் நடைபெற்றதுடன் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்தும் விரிவுரையாளர்கள் கல்விமான்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .