சண்முகம் தவசீலன் / 2017 ஜூலை 19 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேப்பாபுலவில் காணிகள், இன்று (19) விடுவிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையிலும், காணிகள் விடுவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 179 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிகழ்வுக்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகைதந்திருந்தார்.
“இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் இதற்குள் அடங்கவில்லை என மக்கள் தெரிவித்த காரணத்தால், இந்நிகழ்வை அவர்கள் புறக்கணித்தனர்.
“இதன்பின்னர், இப்பிரச்சனை தொடர்பில் அமைச்சரோடு மக்கள் கலந்துரையாடியதன் காரணத்தால், எங்களால் காணிகளைப் பெறமுடியாமல் போனது. காணிகள் கையளிப்பதற்கு ஏற்ற வகையில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
“அவற்றைக் கையளிக்க முடியும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவருடைய காணியும் அதனுள் அடங்கவில்லை” என்றார்.
3 hours ago
8 hours ago
12 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
12 Jan 2026