Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:21 - 1 - {{hitsCtrl.values.hits}}
“இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் இராஜயோகினி டொக்டர் நிர்மலா கஜாரியா, பிரதேச செயலாளர் குணபாலன், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இறுதி யுத்தம் நடைபெற்று முடிவடைந்த வட்டுவாகல் பகுதியில் இந்த விஸ்வ சாந்தி அகம் என்ற தியான மண்டப திறப்பு விழாவில் உங்கள் முன் உரையாற்றக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்கு சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டது வரவேற்புக்குரியது.
பல்லாயிரம் துன்பச் சுமைகளை மனங்களில் தாங்கிக் கொண்டு நடைபிணங்களாக உலாவிக் கொண்டிருக்கின்ற எம்மக்களின் மனங்கள் சற்று அமைதி பெறவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இவ்வகம் இன்று (நேற்று) திறந்து வைக்கப்படுகிறது” என்றார்.
28 Jan 2026
28 Jan 2026
satha Wednesday, 20 September 2017 03:04 AM
பிரம்மாகுமாரிகளை திறந்து வைபதுதன் முக்கியமான வேலை.... நீர் தொலைந்து போம், அடுத்த தேர்தலுடன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026