Yuganthini / 2017 ஜூன் 25 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும் நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மோசமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில், நேற்று (24) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால், முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக, பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனது, நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத் தலைப்பு என்பவற்றை தொழில்நுட்ப ரீதியாக மோசடியான முறையில் பயன்படுத்தி, அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதைப் போல, தமது நோக்கத்துக்கேற்ப கடிதமொன்றைத் தயாரித்து பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில், சிலர் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.
குறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை போன்றும் அமைந்திருப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறிதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.
இதனைப் பாரதூரமான குற்றமாக கருதிய சபாநாயகர், இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுமாறு கூறியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கமைய, தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத்தலைப்பு என்பவற்றை மோசடியான முறையில் கையாண்டு, தனது பேஸ்புக் வழியாகச் செய்தியாகப் பரப்பிய 16இற்கும் மேற்பட்ட பேஸ்புக் சொந்தக்காரர்களும் 10 வரையான இணையத்தளங்களும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 minute ago
11 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
20 minute ago