2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களைக் கொண்டு சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணிம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்லாறு, ஊரியான் மற்றும் மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளில்  சிறுவர்களை சட்டவிரோத மணல் அகழ்வுகள்  மற்றும் கசிப்பு விற்பனை போன்ற தொழில்களுக்கு பயன்படுத்தி  வருவதாக, பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்துக்குட்பட்ட கல்லாறு  ஊரியான் மற்றும் மயில்வாகனபுரம் கிராமங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொது அமைப்புகள், இந்தப் பிரதேசங்களில்  பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை விடுத்து  சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடுகளில் மரங்களை வெட்டுதல் கசிபபு உற்பத்தி விற்பனை ஆகிய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாது?  அவர்களுக்கு உழைப்பு என்ற ஆசையைக்காட்டி குறைந்த வேதனங்களுடன் அவர்;களுடைய உழைப்பு சுரண்டப்படுவதுடன், ஆபத்தான தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள்,  இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம்குறித்து உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .