2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

‘சீதுவிநாயகர்புரம் வீதி ஜனவரியில் புனரமைக்கப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

 

தமது முயற்சியால், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய், சீது விநாயகபுரத்தின்  17.5 கிலோ மீற்றர் வீதி,   "ஐ' வேலைத்திட்டத்தின் கீழ், தார் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், இதற்கான வேலைத்திட்டங்கள் யாவும், ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமெனவும் கூறினார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இந்த வீதி புனரமைப்புக்காக வந்த நிதி,  குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படாத காரணத்தால் திரும்பி சென்றுள்ளதாகவும், தற்போது குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மழைக் காலத்தில், சீதுவிநாயகர்புரம் வீதியால் கனரக வாகனங்கள் மூலம் மணல் ஏற்றி  செல்வது தொடர்பில்  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி, அந்நடவடிக்கையை நிறுத்துவதாகவும், கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--