Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் நகரத்தின் வின்சர் சந்தியில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் நேற்று யாழ். மாநகர சபையின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த வடிகான்கள் துப்புரவு செய்யப்படாததன் காரணமாக, மழை காலத்தில் வெள்ளம் வீதியில் தேங்குகின்ற நிலைமை காணப்பட்டது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் பல தடவைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் ஆணையாளரின் உத்தரவுக்கமைய, மாநகர சபையின் வேலைப்பகுதி பொறியியலாளரின் வழிகாட்டலில் வேலை மேற்பார்வையாளர் பி.ஜெயராஜின் மேற்பார்வையில், வடிகான்கள் துப்புரவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், குறித்த பகுதியில் மழை காலத்தில் வீதியில் வெள்ளம் தேங்குகின்ற நிலைமைத் தவிர்க்கப்பட்டுள்ளது.
40 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
1 hours ago