Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“கிளிநொச்சி மாவட்டத்தில், நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குயின்ரஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பொன்னாவெளி பாடசாலை, குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்பன நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பல்லவராயன்கட்டுப் பாடசாலையைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய பாடசாலைகளைத் திறப்பதற்கான சூழல், தற்போது இல்லை” என்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 112 பாடசாலைகளில் தற்போது 104 பாடசாலைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago