Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
விடுதலைப் புலிகளுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் இன்று (01) போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், பந்தல் அமைக்கப்பட்டு, இன்று முதல் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, கந்தசுவாமி கோவில் முன்பாக ஒன்றுகூடிய உறவுகள், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஏ9 பிரதான வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில், போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
அதேவேளை, கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய முற்பட்ட போதும் முழுமையாக சீர் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார், போராட்டக்காரர்களை வீதியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago