2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்துமாறு, அப்பிரதேச பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அக்கராயன் காவல் பிரிவு அக்கராயன் பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிக்கு நியமிக்கப்படவில்லை.

அக்கராயன் பொலிஸ் நிலையம் தரமுயர்த்தப்பட்ட போதிலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுதி அமைக்கப்படாததன் காரணமாக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிக்கு வரவில்லை எனவும் அவசியமான தேவை ஏற்படின் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இருந்து பெண் பொலிஸார் அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருவதாகவும், அக்கராயன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .