2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை

Niroshini   / 2020 நவம்பர் 19 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று (19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை   மாவீரர் தினத்தை நினைவு கூர, மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் பொலிஸார் இன்று  மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, குறித்த கட்டளையை பெற்றுள்ளனர்.

இதற்கமைய, வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல், அன்ரன் றொஜன் ஸ்ராலின், வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேருக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .