Editorial / 2020 மே 20 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால், அந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கின்ற ஆதங்கம் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார்.
முன்னாள் போராளிகள், அவர்களது முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் தன்னிடம் பேசியதாகத் தெரிவித்த மாவை, அவர்கள் அரசியல் ரீதியாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலமடைய செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
முன்னாள் போராளிகளின் துயரத்தைத் தாங்கள் ங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் கட்சியின் தலைவர் என்ற வகையில், கூட்டமைப்பின் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கதைத்துள்ளதாகவும், அவர் கூறினார்..
இதற்கமைய, விரைவில், சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவைக் கூடி, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்சினை குறித்தான முடிவை எடுக்க இருப்பதாகவும், மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முன்னாள் போராளிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago